யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2019 ஆனது யாழ் மாநகரசபை மைதானத்தில் தை 25ம், 26ம், 27ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளருக்கு தங்களுடைய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபை இலவச காட்சிக்கூடங்களை வழங்கியுள்ளது. மேற்படி காட்சிக்கூடங்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்ற உள்ளனர். மேலும் இலங்கை மற்றும் இந்தியா நாடுகளின் முன்ணணி சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தவுள்ளனர். எனவே மேற்குறித்த தினங்களில் காலை. 10.00 மணியிலிருந்து மாலை 8.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டு பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி கண்காட்சி – 2019 ஆனது பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தை 25ம், 26ம், 27ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளருக்கு தங்களுடைய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபை இலவச காட்சிக்கூடங்களை வழங்கியுள்ளது. மேற்படி காட்சிக்கூடத்திற்கு வட்டு கிழக்கில் அமைந்துள்ள அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தி நிலையம் பங்குபற்ற உள்ளனர். மேலும்; பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி முன்ணணி வர்த்தக நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தவுள்ளனர் எனவே மேற்குறித்த தினங்களில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 9.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிக்கூடங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது இதனை கண்டு பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

             இவ்விழாவானது, மதிப்புக்குரிய சங்கானைப் பிரதேச செயலாளர் திருமதி பொ.பிரேமினி அவர்களின் தலைமையில் 29.11.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவுக்கு விருந்தினர்களாக, திரு.த.கிருபாகரன் (அத்தியட்சகர் அரச முதியோர் இல்லம் கைதடி.)அவர்களும், கலாநிதி ஆறு.திருமுருகன் (தலைவர் சிவபூமி முதியோர் இல்லம் சுழிபுரம்) அவர்களும், திரு.கணபதிப்பிள்ளை செல்வராசு (சுழிபுரம் கிழக்கு முதியோர் சங்கம், சுழிபுரம்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் கலை நிகழ்வுகளும், முதியோர்களுக்காக நடத்தப்பட்ட வேகநடை (ஆண்), கூடைக்குள் பந்து போடுதல் (ஆண், பெண்), சங்கீதக்கதிரை (ஆண், பெண்), கிடுகு பின்னல் (பெண்) ஆகிய போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பாடசாலை மட்டத்தில் கீழ்ப்பிரிவு, இடைப்பிரிவு, மேற்பிரிவு என்ற ரீதியில் நடாத்தப்பட்ட கவிதை,கட்டுரை ,வினாடி வினா போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவானது சங்கானை பிரதேச முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 இவ்வருட பிரதேச செயலக கலாசார விழா பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது

 

News & Events

28
Aug2017

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2019

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2019 ஆனது...

28
Aug2017

பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி கண்காட்சி – 2019

பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி கண்காட்சி – 2019...

News & Events

28
Aug2017

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2019

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2019 ஆனது...

28
Aug2017

பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி கண்காட்சி – 2019

பாதணிகள் மற்றும் தோற்பொருள் உற்பத்தி கண்காட்சி – 2019...

28
Aug2017

கலாசார விழா 2018

   இவ்வருட பிரதேச செயலக கலாசார விழா பிரதேச...

28
Aug2017

முதியோர் மற்றும் மாற்று வலுவுடையோர் தினம் 2018

             இவ்விழாவானது, மதிப்புக்குரிய சங்கானைப் பிரதேச செயலாளர் திருமதி...

Scroll To Top