யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளநல மேப்பாட்டுத் திறன் விருத்தி தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு நேற்று (17.10.2026) மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரியின் 2006 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கு, மாணவர்களிடையே சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அவர்களின் வாழ்க்கைத் தேர்ச்சித் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு, துஷ்பிரயோகங்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாடசாலைகள், பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
இத்தகைய பயனுள்ள நிகழ்வை முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கிய 2006 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு பழைய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மிகவும் முன்னுதாரணமான இச் செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!

சிறுவர்களைப் பாதுகாப்போம்! அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம்!