மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்ட
நிகழ்வானது 2026.10.21 இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக உத்தியோகத்தர் R.செந்தில்குமரன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் S.பிரசாந்தன் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் உத்தியோகத்தர், மற்றும் யாழ் மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகாத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் ATM அட்டையின் பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள், PIN இலக்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி Digital Saving Account முக்கியத்துவம், Digital அறிவு மற்றும் திறனை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகவும்,பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் இந் நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருந்தது.